Shop Pay Installments-இல் பேமெண்ட்டுகள், பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் சிக்கல் தீர்த்தலைப் புரிந்துகொள்ளுதல்
Shop Pay Installments-ஐப் பயன்படுத்தும்போது, நீங்கள் ஆர்டர் செய்யும் நேரத்தில் உங்களுக்கென ஒரு கட்டண அட்டவணை அமைக்கப்படும். பணத்தைத் திரும்பப்பெற நீங்கள் கோரலாம், ஆனால் அந்தச் செயல்முறையின்போது நிலுவையில் உள்ள பேமெண்ட்டுகளை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். தற்போதுள்ள மற்றும் எதிர்கால Shop Pay Installments ஆர்டர்களுக்கான கட்டண முறையை நீங்கள் புதுப்பிக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
கட்டண அட்டவணை
நீங்கள் வாங்கும் இடம், வாங்கும் தொகை மற்றும் கிடைக்கும் திட்டங்களைப் பொறுத்து, செக்அவுட்டின்போது முன்பணம் செலுத்த வேண்டியிருக்கலாம். உங்கள் முதல் பேமெண்ட்டுக்குப் பிறகு, நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டண விருப்பத்தைப் பொறுத்து 2 வாரங்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதாந்திர அடிப்படையிலோ உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். 2 வாரங்களுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் வசதி ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்காவில் கிடைக்கிறது. ஆஸ்திரேலியா, கனடா, யுகே மற்றும் அமெரிக்காவில் மாதாந்திரப் பேமெண்ட்டுகள் கிடைக்கின்றன. உங்கள் கார்டில் ஒவ்வொரு பேமெண்ட்டும் வசூலிக்கப்படுவதற்கு முன்பு மின்னஞ்சல் மற்றும் SMS (பொருந்தினால்) மூலம் உங்களுக்கு நினைவூட்டப்படும். வரவிருக்கும் கட்டணங்களைப் பற்றிய நினைவூட்டல்களைப் பெற, Shop செயலியில் புஷ் அறிவிப்புகளையும் நீங்கள் இயக்கலாம். உங்கள் கட்டண அட்டவணையை நீங்கள் தனிப்பயனாக்க முடியாது.
தாமதக் கட்டணங்கள் மற்றும் கிரெடிட் அறிக்கை
Shop Pay Installments ஆர்டர்களுடன் தொடர்புடைய தாமதக் கட்டணங்கள் எதுவும் இல்லை. Shop Pay Installments-ஐப் பயன்படுத்த நீங்கள் விண்ணப்பிக்கும்போது, உங்கள் கிரெடிட்டில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றாலும், உங்கள் கடன் மற்றும் கட்டணத் தகவல் கிரெடிட் புகாரளிப்பு நிறுவனங்களுடன் பகிரப்படலாம்.
Shop Pay Installments மூலம் செலுத்தப்பட்ட ஆர்டர்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல்
பணத்தைத் திரும்பப்பெறக் கோருவதற்கு, நீங்கள் வாங்கிய ஸ்டோரைத் தொடர்புகொள்ளவும். ரிட்டர்ன் செய்ய முடியுமா என்பதையும், அவர்களின் கொள்கைகளின்படி திரும்பப்பெறும் தொகை எவ்வளவு இருக்கும் என்பதையும் அவர்கள் உங்களுக்குத் தெரிவிக்கலாம். பணத்தைத் திரும்பப்பெறுவதற்காக நீங்கள் காத்திருக்கும்போது, நிலுவையில் உள்ள பேமெண்ட்டுகளை நீங்கள் தொடர்ந்து செலுத்த வேண்டும்.
நீங்கள் Shop Pay Installments-ஐப் பயன்படுத்தியிருக்கும்போது, பணத்தைத் திரும்பப்பெறுவது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
- பணத்தைத் திரும்பப்பெறும் நேரம்: பணத்தைத் திரும்பப்பெறும் கோரிக்கை ஆன்லைன் ஸ்டோரால் செயலாக்கப்பட்டால், 3 முதல் 10 வணிக நாட்களுக்குள் உங்கள் அசல் கட்டண முறைக்கு அந்தப் பணம் வந்துவிடும். மேலும் உங்கள் தவணைகளின் இருப்பு மற்றும் பேமெண்ட்டுகள் தானாகவே புதுப்பிக்கப்படும்.
- பணத்தைத் திரும்பப்பெறுதலைச் செயல்படுத்துதல்: ஆர்டரின் நிலுவையிலுள்ள தவணை இருப்புக்கு, திரும்பப்பெறும் பணம் முதலில் செலுத்தப்படும். அதன்பிறகு மீதமுள்ள தொகை, உங்களின் அசல் கட்டண முறைக்குத் திருப்பி அளிக்கப்படும்.
- பணத்தைத் திரும்பப்பெறுதல் குறித்த அறிவிப்பு: உங்களின் மீதமுள்ள இருப்புக்கும் கட்டண முறைக்கும் இடையே, திரும்பப்பெறும் பணம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது என்பதை விளக்கி Affirm-மிடமிருந்து ஒரு மின்னஞ்சல் பெறுவீர்கள்.
கட்டண முறைகளைப் புதுப்பித்தல்
எதிர்காலக் கொள்முதல்களுக்கும் தற்போதைய தவணை ஆர்டர்களுக்கும் உங்கள் கட்டண முறைகளை எப்படிப் புதுப்பிப்பது என்பது இங்கே தரப்பட்டுள்ளது:
- எதிர்காலக் கொள்முதல்களுக்கு: உங்கள் Shop Pay கணக்கில் உள்ள கட்டண முறையைப் புதுப்பிப்பது, Shop Pay வாயிலாக எதிர்காலத்தில் செய்யும் கொள்முதல்களை மட்டுமே பாதிக்கும். தற்போதைய தவணை ஆர்டர்களுக்கான கட்டண முறையில் இந்த மாற்றம் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
- தற்போதைய தவணை ஆர்டர்களுக்கு: தொடர்ந்து செலுத்தப்பட்டு வரும் தவணைப் பேமெண்ட்டுகளுக்கான கட்டண விவரங்களை மாற்ற, தற்போதுள்ள ஒவ்வொரு Shop Pay Installments ஆர்டருக்கும் கட்டண முறையைத் தனித்தனியாக நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.
தவணை ஆர்டர்கள் குறித்த சிக்கல் தீர்த்தல்
உங்களின் தவணை ஆர்டர்களில் சிக்கல்களை எதிர்கொண்டால், பின்வரும் பொதுவான பிரச்சனைகளையும் தீர்வுகளையும் கருத்தில்கொள்ளவும்:
- ஆர்டர் கண்ணுக்குத் தெரியவில்லை: உங்களின் Shop Pay கணக்கிலோ Shop செயலிலோ உங்கள் தவணை ஆர்டரைப் பார்க்க முடியவில்லை எனில், ஆர்டருக்குப் பயன்படுத்திய அதே மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு உள்நுழைந்துள்ளீர்களா எனச் சரிபார்க்கவும். இந்த மின்னஞ்சலுக்குத்தான் ஆர்டர் உறுதிப்படுத்தலைப் பெற்றிருப்பீர்கள்.
- அதிகப்படியான பேமெண்ட்டுகள்: தற்செயலாக உங்கள் மொத்தத் தவணை இருப்பைவிட அதிகமாகப் பணம் செலுத்தியிருந்தால், நீங்கள் பயன்படுத்திய கட்டண முறையிலேயே Affirm தானாகவே பணத்தைத் திரும்பியளிக்கும். ஒரு மாதாந்திரப் பேமெண்ட்டில் அதிகமாகப் பணம் செலுத்தியிருந்தால், அந்தக் கூடுதல் தொகை உங்கள் மொத்தத் தவணை இருப்பில் கிரெடிட் செய்யப்படும். மாற்றாக, நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து அமெரிக்கா, கனடா அல்லது யுகேவில் உள்ள Affirm உதவி மையத்தில் ஒரு படிவத்தைப் பூர்த்திசெய்வதன் மூலம், கூடுதல் தொகைக்குப் பணத்தைத் திரும்பப்பெறக் கோரலாம்.