Shop இல் விளம்பரத் தனிப்பயனாக்கம்
Shop இல் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை நீங்கள் அனுமதிக்கும்போது, உங்கள் செயல்பாடுகள் மற்றும் விருப்பத்தேர்வுகளின் அடிப்படையில் உங்கள் விளம்பர அனுபவம் வடிவமைக்கப்படும். இந்த அமைப்பை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிர்வகிக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படும் தகவல்
உங்கள் விளம்பரங்களைத் தனிப்பயனாக்க Shop பின்வரும் தகவலைப் பயன்படுத்தலாம்:
- நீங்கள் முன்பு பார்த்த தயாரிப்புகள் மற்றும் ஸ்டோர்கள்: உங்கள் செயல்பாட்டை Shop உடன் பகிர அந்த ஸ்டோர் தேர்வுசெய்திருக்கும்போது, நீங்கள் உலாவிப் பார்த்த உருப்படிகள் மற்றும் Shopify ஸ்டோர்கள்.
- Shop செயலி மற்றும் shop.app ஆகியவற்றில் உங்கள் செயல்பாடு: Shop இல் நீங்கள் தட்டியவை, தேடியவை மற்றும் பின்தொடர்ந்தவை.
- உங்கள் Shop Pay செயல்பாடு: Shop Pay ஐப் பயன்படுத்தி முடித்த கொள்முதல்கள், முடிக்கப்படாத Shop Pay செக்அவுட்கள் மற்றும் கார்ட் உள்ளடக்கங்கள் போன்ற Shop Pay உடனான உங்கள் தொடர்புகள்.
- உங்கள் ஆர்டர்கள்: Shop மூலமாக நீங்கள் வாங்கியவை, மேலும் ஒரு பிராண்டிற்கு நீங்கள் புதிய வாடிக்கையாளரா அல்லது மீண்டும் வரும் வாடிக்கையாளரா என்ற விவரம்.
- Shop இல் நீங்கள் சேர்த்த ஷாப்பிங் விருப்பத்தேர்வுகள்: Shop இல் உங்களின் தனிப்பயனாக்க அமைப்புகளில் நீங்கள் சேர்க்கத் தேர்ந்தெடுத்த அளவுகள் அல்லது பிற தகவல்கள் போன்ற விருப்பத்தேர்வுகள்.
உங்களைப் போன்ற வாங்குபவர்கள் விரும்பும் பிராண்டுகளைப் பரிந்துரைக்க, ஷாப்பிங் ட்ரெண்டுகளும் பயன்படுத்தப்படலாம்.
தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் முடக்கப்படும்போது உங்கள் விளம்பர அனுபவம்
நீங்கள் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை இயக்கவில்லை என்றாலோ அல்லது அவற்றை முடக்கியிருந்தாலோ, Shop இல் உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்கள் உங்களுக்கானதாக இருக்க வாய்ப்புக் குறைவு. அதற்குப் பதிலாக, பிரபலமாக இருப்பவை, தற்போது நீங்கள் பார்க்கும் உள்ளடக்கம், உங்களின் தற்போதைய அமர்வில் உள்ள செயல்பாடு அல்லது உங்களின் பொதுவான இடம் போன்ற பொதுவான சூழலின் அடிப்படையில் விளம்பரங்கள் அமையலாம்.
தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை முடக்குவதால் Shop செயல்படுவது நிற்காது. மேலும் உங்கள் ஆர்டர்களை முடித்தல், உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு Shop உங்கள் தகவலைத் தொடர்ந்து பயன்படுத்தும். உங்கள் தரவு மற்றும் தனியுரிமை அமைப்புகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.