Shop Pay Installments மேலோட்டம்

Shop Pay Installments வாயிலாக தகுதியான வாடிக்கையாளர்கள் ஒரு ஆர்டருக்கான கட்டணத்தைச் சிறிய தொகைகளாகக் காலப்போக்கில் செலுத்தலாம். இது ஆஸ்திரேலியா, கனடா, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவில் கிடைக்கிறது. Affirm வழங்கும் சேவையான Shop Pay Installments சில ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும். உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து, பின்வரும் தொகைகளுக்கு இடைப்பட்ட ஆர்டர்களுக்கு நீங்கள் Shop Pay Installments-ஐப் பயன்படுத்தலாம்:

  • ஆஸ்திரேலியாவில் $50 AUD மற்றும் $2,000 AUD
  • கனடாவில் $35 CAD மற்றும் $30,000 CAD
  • யுனைடெட் கிங்டமில் £50 மற்றும் £30,000 GBP
  • அமெரிக்காவில் $35 USD மற்றும் $30,000 USD

Shop Pay Installments எவ்வாறு செயல்படுகிறது

செக்அவுட்டில் Shop Pay Installments-ஐத் தேர்வுசெய்யும்போது, நீங்கள் Affirm மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களின் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்ய Affirm கூடுதல் தகவல்களைக் கோரக்கூடும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், உங்கள் கொள்முதலை Affirm பல சிறிய பேமெண்ட்டுகளாகப் பிரிக்கும்.

ஆஸ்திரேலியாவில், அங்கீகரிக்கப்பட்ட கொள்முதல்கள் 4 வட்டி இல்லாத பேமெண்ட்டுகளாகப் பிரிக்கப்படும், அவற்றை 2 வாரங்களுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். பிற நாடுகளில், செக்அவுட்டில் நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய திட்டங்களைப் பொறுத்து 2 வாரங்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதந்தோறுமோ பேமெண்ட்டுகளைச் செலுத்த வேண்டும்.

உங்கள் இருப்பிடம், கொள்முதல் தொகை மற்றும் கிடைக்கும் திட்டங்களைப் பொறுத்து, செக்அவுட் செய்யும் நேரத்தில் முன்பணம் (down payment) செலுத்த வேண்டியிருக்கலாம். அபராதம் ஏதுமின்றி உங்களின் கடனை முன்கூட்டியே செலுத்தும் விருப்பத்தையும் தேர்வுசெய்யலாம். வட்டி விதிக்கப்படும் கடன்களுக்கு, மீதமுள்ள இருப்பை முன்கூட்டியே செலுத்தும்போது வட்டிக் கட்டணங்களை மிச்சப்படுத்தலாம்.

உங்கள் கடனுக்கான சேவையை வழங்கும் Affirm உடனான கூட்டாண்மையின் மூலம் Shop Pay Installments வழங்கப்படுகிறது. Affirm மற்றும் Shop Pay Installments குறித்து மேலும் அறிய, உங்கள் இருப்பிடத்திற்கு ஏற்ப Affirm உதவி மையத்தில் உள்ள பின்வரும் பக்கங்களை மதிப்பாய்வு செய்யவும்:

Shop Pay Installments-க்கு விண்ணப்பித்த பிறகு என்னென்ன நடக்கும்

Shop Pay Installments-க்கு நீங்கள் விண்ணப்பித்த பிறகு, Affirm உங்களின் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யும். உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதா என்பதைத் தெரிவித்து, Shop Pay-க்கு நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிக்கு Affirm-இடம் (shoppay@shop.affirm.com) இருந்து ஒரு மின்னஞ்சல் வரும். இந்த மின்னஞ்சல் உங்கள் ஸ்பேம் அல்லது ஜங்க் ஃபோல்டருக்குச் செல்லலாம் என்பதால், அந்த ஃபோல்டர்களையும் சரிபார்க்க மறக்க வேண்டாம்.

உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில், அதற்கான காரணத்தை அந்த மின்னஞ்சல் விளக்கும், பொருந்தினால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் அதில் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு கொள்முதல் முயற்சியின்போதும் உங்கள் தகுதியை Affirm தீர்மானிக்கிறது என்பதால், அடுத்த முறை நீங்கள் விண்ணப்பிக்கும்போது உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கலாம் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தால், Shop செயலியில் உங்களின் கட்டண அட்டவணை காட்டப்படும், ஒவ்வொரு பேமெண்ட்டுக்கும் முன்பு மின்னஞ்சல் மற்றும் SMS நினைவூட்டல்களைப் (பொருந்தினால்) பெறுவீர்கள். நீங்கள் Shop செயலியில் புஷ் அறிவிப்புகளை இயக்கவும் முடியும். Shop செயலியில் உங்களின் Shop Pay Installments ஆர்டர்களைப் பார்த்து நிர்வகிக்கலாம்.

உங்களின் கட்டண அட்டவணையை நீங்கள் தனிப்பயனாக்க முடியாது, ஆனால் முன்கூட்டியே பேமெண்ட்டுகளைச் செலுத்தலாம். மேலும் Shop செயலியில் அல்லது உங்கள் உலாவியில் Shop-இல் உள்நுழைந்திருக்கும்போது மேனுவல் பேமெண்ட்டுகளைச் செலுத்தலாம்.

மேலும் உதவி வேண்டுமா?எங்களுடன் அரட்டையடியுங்கள்